இலங்கைக்கு 800 மேலதிக ஹஜ் கோட்டா...? அரச ஹஜ் குழு விடுத்துள்ள எச்சரிக்கை இதுதான்.

இலங்கைக்கு இவ்வருடம் 800 மேலதிக ஹஜ் கோட்டா கிடைத்திருப்பதாக
வதந்திகள்
பரப்பப்பட்டு வருவதாகவும், ஹஜ் விண்ணப்பதாரிகள் மேலதிக ஹஜ் கோட்டாவில் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம் என எதிர்பார்த்து ஹஜ் முகவர்க ளுக்கோ, உப முகவர்களுக்கோ கட்டணங்களைச் செலுத்த வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தற்போது மக்காவில் தங்கியிருக்கும் அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்களான மௌலவி எம்.எஸ். எம், தாஸிம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகியோர் மக்காவில் தெற்காசிய நாடுகளின் ஹஜ் விவகா ரங்களுக்கும் பொறுப்பான கலாநிதி ராபத்பத்ரை சந்தித்து உரையாற்றியுள்ளார்கள்.




இவர்களது சந்திப்பின் போது இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா வழங்கப்படுவது பற்றி எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம். K.சியாத் தெரிவித்தார்.



அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,



ஒரு சில முகவர்கள் மற்றும் அவர்களது உப முகவர்கள் இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா கிடைத்திருப்பதாக கூறி கட்டணம் அற விட்டு வருவதாக ஹஜ் குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.




எனவே எவராவது மேலதிக ஹஜ் கோட்டாவை இலக்கு வைத்து கட்டணம் செலுத்தியிருந்தால் தாமதியாது பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள் கிறோம் என்றார்.



இவ்வருடம் இலங்கைக்கு 3000 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையிலிருந்து இறுதித்தொகுதி ஹஜ் யாத்திரிகர்களுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி விமானம் சவூதிக்குப் பயணமாகவுள்ளது.