நாமல் பேபியின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகை ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனம் !!


நாமல் பேபியின் லம்போகினி பற்றிவிமர்சித்தவர்கள் அலரி மாளிகைஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாகஇருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானககுறிப்பிட்டார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும்குறிப்பிடுகையில்..
வரலாற்றில் முதலாவது திருமண வைபவம் அலரிமாளிகையில் நேற்று கோலகலமாகநடைபெற்றுள்ளது.கடந்த ஆட்சியின் போது மக்கள்சேவைக்காக பயன்படுத்தப்பட்ட அலரிமாளிககைதற்போது திருமண நடனமாடும் களியாட்டவிடுதியாக்கப்பட்டுள்ளது.
நாமல் பேபியின் லம்போகினி பற்றிவிமர்சித்தவர்கள் அலரி மாளிகை ஆடம்பரதிருமணம் தொடர்பில் மௌனமாக உள்ளனர்.


இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கியமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க கடந்தகாலங்களில் பல்வேறு போலி விமர்சனங்களைமுன்வைத்திருந்தார்கள்.


மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் புதல்வர்களிடம்லம்போகினி கார் உள்ளதாக கூறினார்கள், தங்ககுதிரை உள்ளது என கூறினார்கள், விலையுயர்ந்தகடிகாரம், பாதணிகள் உள்ளதாக கூறினார்கள்இவை அனைத்தும் பொய்யான குற்றசாட்டு என்பதுதற்போது நிரூபணமாகியுள்ளது.


அன்று இது தொடர்பில் வாய் கிழியவிமர்சித்தவர்கள் இன்று அலரி மாளிகையில்திருமண கழியாட்ட விழாக்கள் நடக்கும் போதுஒன்றும் அறியாதவர்கள் போல இருக்கிறார்கள் எனகுறிப்பிட்டார்.