குறைந்தபட்ச திருமண வயதெல்லையும், நவீன மேதாவிகளும்

-ஐயூப் முஹம்மது ரூமி-

இன்று மார்க்கப் பகுத்தறிவாளர்கள் அதிகம் இருக்கின்றனர். உதாரணமாக
ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இஸ்லாமிய
திருமண வயது வரையறை தொடர்பானது.

இன்று பலரும் மேற்கையும் உலக மக்களையும் திருப்திப் படுத்துவதன் மூலமாகத்தான் தாம் சிறந்தவர்கள் என எண்ணுகின்றனர். அப்படி ஒரு திருப்தி இருப்பதாய் இருந்தால் அன்று முஸ்லிம்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள் என்பதே மார்க்க விளக்கமாகும். நபி மொழியின் அடிப்படையில் முஸ்லிம்கள் காபிர்களை பின்பற்றும் வரைக்கும் அவர்கள் திருப்தி அடையப் போவதில்லை.

இவ் வகையான மார்க்க அறிஞர்கள் சிறுவர் பாதுகாப்பு, மனித உரிமை போன்ற புலன் வாதங்களை ஏற்றுக்கொண்டு குறைந்த பட்ச வயதெல்லை பற்றிப் பேசுகின்றனர். 

அவர்கள் தமது வாதத்தை முன் வைக்கும் முன்னர் (இஸ்லாமிய) திருமணத்தின் நோக்கம் என்ன? என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அது இணைவைப்பாளர்களின் நோக்கத்தை விட்டும் முரணானது. 

இஸ்லாம் திருமண நிபந்தனை பற்றிப் பேசும் போது, அதற்குரிய பௌதிக முதிர்ச்சி, அவ் வாழ்க்கை பற்றிய அறிவு, குடும்பத்தை பராமரிக்கும் தகுதி, சமரச விருப்பம்ங போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

நடைமுறை உலகில் இவ்வாறான முதிர்ச்சிகளுக்கும் வயதுக்கும் தொடர்பு இருப்பதில்லை என்பதை யாவரும் அறிகின்றனர். 

17 வயதில் ஒருவர் உடலாலும், மனோ வலிமையாலும், பொருளாதார பலத்திலும் அதிக ஆற்றலைக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.

அவ்வாறே 18, 21 வயதை அடைந்தவர்கள் கூட இம் முதிர்ச்சிகளில் பலவீனமானவர்களாக இருந்து விடலாம். 

மேலோர்க்கு இஸ்லாம் திருமண உரிமையை வழங்குகின்றது. அடுத்த பகுதியினருக்கு மறுக்கின்றது.

இந்த அனுமதி அவர்களின் சட்டத்தில் தலை கீழானது. 

இப்பொழுது மகிழ்ச்சியான வாழ்க்கையை யார் வாழ முடியும்? 

இன்னும் மகிழ்ச்சிக்கும் இறைவனுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன? 

ஓ சடத்துவ வாதிகளே உங்களின் ஒரு வினா என்னிடம் கேட்கிறது. அவர்கள் குறைந்த வயதில் தகுதி அற்றவர்களாக இருந்தால் நிலைமை என்னவாகும் என்று நினைக்கின்றீர்கள். அறிவாளிகளே, இஸ்லாம் அக் கட்டத்தில் திருமணத்திற்கு அனுமதி வழங்க மாட்டாதே. இன்னும் 23 வயதை அடைந்தும் பாலர்களாக இருப்பவர்களுக்கும் அது அனுமதி வழங்காது.

திருமண நிபந்தனை தொடர்பான வாதத்தை நான் உங்கள் பகுத்தறிவுக்கு விட்டு விடுகிறேன். ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். உங்கள் பொருளியல் மேதைகள் திருமணத்தையும் குழந்தை வளர்ப்பையும்  cost benefit analysis ஆகப் பார்ப்பார்கள். அல்லாஹ் என்ற ஒருவன் இடையில் இருப்பதில்லை. ஆனால் அல்லாஹ் திருமணத்தால் செலவுண்டாகும் என்று கூறவில்லை. அதனால் பரக்கத் உண்டாகும் என்கிறான். குழந்தைகளுக்கு நீங்கள் உணவளிக்க வில்லை நாமே உணவளிக்கின்றோம் என்கிறான். உணவு மட்டுமல்ல முழு ரிஸ்க் உம் தான்.

இவை இரண்டும் இரு முரண்பட்ட கருத்துக்குக்கள் முன்னையது அறிவியல் என்று நம்பப்படுகின்ற போலி அறிவியல் மார்க்கம். பின்னையது இஸ்லாம்.......

ஒரேயொரு விடயத்தை மட்டும் பேசுகின்றேன்.
இஸ்லாம் திருமணத்தால் ஒழுக்கத் தூய்மையை எதிர்பார்க்கிறது. அவர்களோ திருமணத்திற்கு முன்பு கருக்கலைப்புச் செய்கின்றனர். அதற்கு பின்பும் விரும்பியவாறு வாழ்கின்றனர். இவர்களின் மூளையால் சிந்திக்கும் அந்த அறிவியல் மேதாவிகளிடம் நான் கேட்பது, அவர்கள் திருமண வயதுவரை திருமண வாழ்க்கையைத் தான் வாழ முடியாது. ஆனால் உறவு வைத்துக் கொள்ளலாம். உடலியல் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வதில் தடையொன்றும் இருப்பதில்லை. 

அவர்கள் உரிய வயதை அடைந்த பெண்ணின் விருப்பத்துடனும், அல்லது திருமணமான வேறு ஒரு பெண்ணின் விருப்பத்துடனும் உறவு வைத்துக் கொள்வதில் தவறு கிடையாது. இது பற்றி இந்த முஸ்லிம்களுக்கு நீங்கள் எதனைப் பரிந்துரைக்கின்றீர்கள்?

நான் நினைக்கிறேன், அதனை எதிர்ப்பீர்கள் என்று தான். ஆனால் அந்த வாழ்க்கை முறையை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் இந்த வயதுச் சட்டமும் சரியாகும். ஏனெனில் அந்த மதத்தில் தான் அதற்குரிய பரிகாரமும் இருக்கிறது. 

நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதாயின் இஸ்லாத்தின் பிரகாரத்தைத் தான் பின்பற்ற வேண்டும். மதக் கோட்பாடு ஒன்றாகவும் அதன் பரிகாரம் வேறு மதமாகவும் இருக்க முடியாது. 

பத்வா என்பது மிகவும் பாரதூரமானது. அது உங்கள் செயலேடு போன்றது. பின்பற்றுபவர்களின் பலியினை அந்த பத்வாவினை வழங்கியவர்கள் பொறுப்பேற்க இருக்கின்றனர்.

திருமண வயதெல்லையை பேசுபவர்களே, அன்றைய தினத்தை விட இன்று சக்தி குறைந்து விட்டது என்கின்றீர்கள். நான் கேட்கின்றேன் அன்றைய தினத்தை விடவும் அதிக இரசாயனப் பயன்பாடுகள், வாழ்க்கை முறை என்பன மனிதனின் ஓமோன்களில் இரசாயன தூண்டலை நிகழ்த்தி உணர்ச்சிகளைக் கூர்மையாக்கும் உண்மையை நீங்கள் ஏன் மறுக்க வேண்டும். 

இந்த மறுப்பாளர்கள், இரண்டு தன்மைகளில் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று அவர்கள் மனித உணர்வுகளில் ஒன்றை ஏதோ ஒரு நோயினாலோ அல்லது இயற்கையாலோ இழந்திருக்க வேண்டும். அதனால் மனிதர்களின் இயற்கை உணர்வுகளை அவர்கள் அறிய முடியாதவர்களாக மாறியிருக்க வேண்டும். 

அல்லது அவர்கள் அந்த உணர்வுகளால் மனிதர்கள் ஒழுக்கமற்ற பாவங்களை செய்வது அத்தனை பாரதூரமானதாக அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. இந்த நேரத்தில் அவர்கள் ஒன்று நோயாளிகள் அல்லது மார்க்க விரோதிகள் இவர்கள் இரு சாராரும் சட்ட விடயத்தில் அருகதை அற்றவர்கள்.

இந்த பத்வாக்களை வழங்குபவர்கள், ஒருவர் இஸ்லாமிய அடிப்படையில் திருமண தகுதியை பெற்றுக்கொள்கிறார். ஆனால் இவர்களின் சட்டத்தினால் அதனை அடைந்து கொள்ள முடியாத போது. தன்னை பாவத்திற்கு பழக்கப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் உட்படுகின்றார்.

தீய காட்சிகளைப்ங பார்க்கும் பழக்கம்......... இப்படி பல்வேறு பழக்க வழக்கங்கள் உட்புகுகின்றன.. நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயம், ஜாஹிலிய சமுதாயம்... போன்றவற்றின் பாவங்களுக்கு அவன் அடிமையாக மாறுகின்றான். இவர்கள் திருமணத்தால் தனது பாவங்களை கழிவி விடும் போது, ஒருவேளை அந்த நிலைமையை உண்டாக்க இஜ்திஹாத் செய்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். அல்லாஹு அஃலம்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் பாவங்களை ஹலாலாக்கினால் மட்டும் தான் இது சாத்தியமானது. நீங்கள் சட்டமியற்றுவது தொழிற்சாலைகளுக்கல்ல. உணர்வு மிக்க மனிதர்களுக்கு. 

இந்த உணர்வினை அவர்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அன்று எங்குமே முகம் மறைத்த பெண்கள், தூசி படிந்த ஆடைகள்.. இரகசிக்க முடியாத தோற்றம். அவர்கள் பாவம் செய்வதற்காக ஒரு தீய நடத்தை கொண்ட பெண்ணிடம் தான் செல்லவேண்டி இருந்தது.

இன்று அரைகுறை ஆடைகள், எங்கும் கவர்ச்சி, அழகிய வர்ணங்கள் இப்படி சமுதாயம் மாற்றம் கண்டிருக்கின்றது. இன்று தொலைபேசி, இணையம்....... எங்குமே பாவத்திற்கான வழிகள் திறந்து விடப்பட்ட நிலையில், அதற்கான செயற்கைக் கருவிகள் உருவாக்கப்பட்டு பாவத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்போது நீங்கள் திருமணத்திற்கு பகுத்தறிவைப் பாவிக்கும் போது, அதற்கு வரையறை நிர்ணயிக்கும் போது அதனுடன் இந்தப் பாவங்களுக்கும் தான் நீங்கள் அனுமதி வழங்குகின்றீர்கள்.

இரண்டுமே இணைந்து நிற்கும் போது எப்படி ஒன்றை மட்டும் கூறி மற்றயதை இல்லை என்று கூறுகின்றீர்கள்.

இஸ்லாமிய சட்டத்தின் பின்னால் நிச்சயமாக உண்மை இருக்கும். எனது நம்பிக்கை மூலம் கூறுகின்றேன். இந்த பாவங்களை நீங்கள் ஒரு நாள் பாரதூரமாக உணர்வீர்கள். 

உதாரணமாக சொல்கிறேன், ஒரு மாணவன் வழமையாக மூளையின் சக்தியின் அளவில் கல்வி கற்று பரீட்சையை எதிர்கொள்கிறான். இன்னும் ஒரு மாணவன் அன்றைய இரவில் மூளைக்கு பாரம் கொடுத்து தன்னை வருத்துகிறான். ஒரு கட்டத்தில் மூளையின் செயற்பாடு முற்றுப் பெறுகிறது.

இப்படித்தான் திருமண வாழ்க்கையும், இந்த போராட்ட வாழ்க்கையும் ஆகும். மனிதனின் சக்தியை அது தின்று விடுகிறது. உடல் சமநிலையில் மாற்றத்தை உண்டாக்கின்றது. இயற்கையை மாற்றுவது இப்படிப்பட்டது தான். 

நிச்சயமாக சக்தியால் மரணித்த மனிதர்களைத் தான் நீங்கள் பிறகு திருமணம் செய்து வைக்கின்றீர்கள். அதனை நிச்சயமாக இன்னும் விளக்கமாக இந்த விஞ்ஞானம் விளக்கும்.

ஏனெனில் இப்போது அவகள் பெற்றுக் கொள்ளும் இந்த செயற்கை இன்பத்தில் பதட்டம், அவசரம், குற்ற உணர்வு..... இப்படி பல பண்புகள் சேர்ந்து அவர்களின் முழுச் சக்தியையும் இயற்கையை மீறியதாக மாற்றுகிறது.

இன்னுமொரு உதாரணத்தை சொல்கிறேன். பாவமான பார்வையினால் மனித அறிவு பலவீனமடைகிறது என்பது இஸ்லாமிய நம்பிக்கை. பார்வை என்பது நரம்புடனும் மூளையுடனும் தொடர்புடையது. அதனுடன் இந்த தீய எண்ணங்கள் இணைந்து கொள்ளும் போது, அது ஒரு மாற்றத்தை நிகழ்த்துகிறது. இப்படித்தான் இந்த பாவங்களால் மனிதன் மாற்றமடைகிறான். ஒரு நாள் இதனை இன்னும் தெளிவாக விஞ்ஞானம் பேசும். அன்று இந்தக் கருத்துக்காகவே மக்கள் உங்களை சாபமிடுவார்கள். இன்று நீங்கள் பிரபல்யமாக இருக்கலாம். ஆனால் காலவோட்டத்தில் அது இழிவினை வழங்கும். நிச்சயமாக இஸ்லாம் தான் உண்மையானது.

இன்று சிலர் தமது பிள்ளைகளுக்கு சிறிய வயதில் திருமணம் முடித்து வைக்க மாட்டோம் என்கின்றீர்கள். ஏன் நாமும் அப்படி நினைக்க முடியும். இது தனிப்பட்ட பிரச்சினை அதை ஏன் சமூகத்தில் கொண்டு வருகின்றீர்கள். 

ஒரு கணவன் தனது மனைவிக்கு சுன்னத்தான நோன்புகளுக்கு தடை விதிக்கின்றான். அது அவனது குடும்பப் பிரச்சினை இதனை ஏன் நீங்கள் சமூகத்திற்கு கொண்டுவருகின்றீர்கள்.

இஸ்லாம் நோன்பினை இதற்கான தீர்வாக முன்வைப்பது. முடியாத மக்களைப் பாதுகாக்கவே, மக்களின் இயலுமைகளை நீங்கள் தடுத்து வைத்து விட்டு தீர்வு சொல்வதற்காக அல்ல. அது நிபந்தனை பூர்த்தியாகும் வரையானதே தவிர. நீங்கள் காலங்களை நீடிப்பதற்காக அல்ல. இதனை இன்னும் விரிவாக உங்களுடன் பேசுவதற்கு நான் விரும்பவில்லை.


ஆனால் எனது மக்களிடத்தில் நான் வேண்டிக்கொள்வது, ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதுவரைக்கும் யாரெல்லாம் இஸ்லாத்திற்கு முரணான வாதங்களை முன்வைத்தனரோ அவர்கள் பயன்படுத்திய வாதம் தான், இஸ்லாத்தை சரியாக விளங்கிக் கொள்ளுதல் என்ற அடிப்படை ஆகும். ஏனெனில் இஸ்லாத்தை மறுத்தால் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், அதனை இஸ்லாமிய பெயரின் கீழாக வலியுறுத்துவது வழமையாக இருக்கிறது. இதனை நான் முழு இஸ்லாமிய வரலாற்றிலும் கண்டிருக்கின்றேன். எனவே உங்களை அவர்கள் அழைப்பதும் இஸ்லாமிய பெயராலேயே இருக்கும்.