Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக ….சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள்




கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு குறித்த இரத்தினக் கற்கள் கடத்திக் கொண்டுவரப்பட்டபோதே சுங்க அதிகாரிகளால்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் இந்த குற்றத்துடன் தொடர்புடையதாககைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மிகவும் சூசகமான முறையில் குறித்த இரத்தினக் கற்களை தமது பையினுள் மறைத்துக் கொண்டு வந்தபோது விமான நிலைய பரிசோதனைக் கூடத்தில் சிக்கினர்.

குறித்த சந்தேகிகளிடமிருந்து சிக்கிய ரத்தினங்களைப் பார்த்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.

இவர்களிடமிருந்து சுமார் ஏழுகிலோ நிறையுடைய ஐந்துகோடி ரூபா பெறுமதியான இரத்தினங்கள் மீட்கப்பட்டன.

குறித்த நபர்களை பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.