மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியாவின் “பாரத ரத்னா” விருது ..முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் “பாரத ரத்னா” விருது வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.


எதிர்வரும் மாதம் 10 திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமனிய சுவாமி மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரின் இறுதி சடங்குகளில் கலந்துகொண்ட அதேவேளை அவருடன் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.