கண் பார்வையற்ற தம்பதிக்கு, மவுன்ட லெவனியா ஹோட்டல் வழங்கிய இன்ப அதிர்ச்சி


கொழும்பில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
கண் பார்வையற்ற ஆண் மற்றும் பெண் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இசுரு மற்றும் திஸ்ஸ என்ற இந்த தம்பதியர் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இருவரும் முழுமையாக கண் பார்வை அற்றவர்கள்.

இந்நிலையில் புதுமணத் தம்பதியருக்காக கல்கிசையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஒன்று, முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியர் தமது தேனிலவை கழிப்பதற்காக ஹோட்டல் நிர்வாகம் இலவசமாக இரண்டு நாட்கள் தங்கியிருக்கு அனுமதி வழங்கியது.

குறித்த நாட்களில் ஹோட்டலில் உள்ள அனைத்து விடயங்களையும் இலவசமாக பயன்படுத்த முடியும்.

மவுன்ட லெவனியா ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த பரிசு காரணமாக, புதுமணத் தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டி கருத்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.