Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மியன்மாரில் கடும் வெள்ளம்... பல்லாயிரக் கணக்கானோர் ஊர்களில் இருந்து வெளியேறினர்.


மியன்மாரின் மத்திய பிராந்தியத்தில் அணை உடைந்ததால் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தையடுத்து,
63,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் நேய்பிட்டாவிலிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்வார் நகருக்கு அருகே அமைந்திருக்கும் அணை, உடைந்ததையடுத்து அந்த வட்டார நகரங்களும், கிராமங்களும் நீரில் மூழ்கின.

யங்கோன், மண்டலாய் ஆகிய நகரங்களைத் தலைநகருடன் இணைக்கும் யங்கோன் – மண்டலாய் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இருவர் காணாமல்போயுள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளில் சிக்கியுள்ளனர்.

இரவு முழுவதும் இராணுவம், பொலிஸார், தீயணைப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளுடன், மீட்பு பணியாளர்களும் குடியிருப்பாளர்களைப் படகுகள் மூலம் வெளியேற்றினர்.

தேடல் மீட்புப் பணிகள் தொடரும் வேளையில், அணை உடைந்ததற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.