துருக்கிக்கு எந்தவித, மன்னிப்பும் கிடையாது - டிரம்ப் எச்சரிக்கை
துருக்கிக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துருக்கு – அமெரிக்க நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


துருக்கி தொடர்ந்தும் நினைத்த மூப்பில் செயற்பட்டு வருகின்றது. இது கவலைக்குரிய விடயம். அவர்கள் செய்வது பெரியதொரு தவறு என்பதை அறியாதுள்ளனர். அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.