உடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்


கேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்பு ஒன்று, ஃபைசலை அணுகி, “பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சில புதிய உடைகளை நன்கொடையாக வழங்கும்படி” கேட்டது.

“சில உடைகள் என்ன…இதோ என் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அத்தனை ஆடைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கடையையே அந்தத் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டார் ஃபைசல்
(படம் நன்றி மாத்யமம்)

லட்சக்கணக்கான மதிப்புள்ள புத்தம் புதிய உடைகளை தானமாக வழங்கிய ஃபைசலின் நல்ல உள்ளத்தை எப்படிப் பாராட்டுவது…!

இறைவன் தன் அருள்வளங்களை அவர் மீது பொழியட்டும்.
-சிராஜுல்ஹஸன்