ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க அனைத்து செயற்பாடுகளையும் செய்கிறோம். ஜனாதிபதியுடனும் பேசுவேன்.


கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை தொடர்பில்,தாம் ஜனாதிபதி
மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் புத்தசாசன அமைச்சுக்கு சென்று கலந்துரையாடிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், புத்தசாசன அமைச்சினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் தாம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்​போதும் மத மற்றும் தேசிய நிகழ்வுகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.