இலஞ்சம் பெற முயன்ற அதி­காரி கைது



அக்­க­ரைப்­பற்று பகு­தி­களின் வீதி­களை நிர்­மா­ணிக்கும் ஒப்­பந்­தங்­களை பெற்­றுக்­கொண்ட ஒரு­வ­ரிடம் அந்த ஒப்­பந்­தங்­க­ளுக்­கான நிதியை விரை­வாகப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக இலஞ்சம் பெற்­றுக்­கொண்ட அபி­வி­ருத்தி அதி­கா­ரி­யொ­ரு­வரை

நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு அதி­கா­ரிகள் கைது ­செய்­துள்­ளனர்
. இதன்­போது ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச சபையில் அபி­வி­ருத்தி அதி­கா­ரி­யாக கட­மை­யாற்றும் நப­ரொ­ரு­வரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவர் அக்­க­ரைப்­பற்று பகு­தி­களில் வீதி­களை நிர்­மா­ணிக்கும் ஒப்­பந்­தங்­களை பெற்­றுக்­கொண்ட ஒரு­வ­ரிடம் அந்த ஒப்­பந்­தங்­க­ளுக்கான நிதியை விரை­வாக பிர­தேச சபை­யி­லி­ருந்து பெற்றுத் தரு­வ­தற்­காக 60,000 ரூபா இலஞ்சம் கோரி­யுள்ளார். இதில் 15 ஆயிரம் ரூபாவை முதலே பெற்­றுக்­கொண்ட இவர் நேற்று அக்­க­ரைப்­பற்று சாக­ம­பார என்ற பகு­தியில் அமைந்­தி­ருக்கும் முறைப்­பாட்­டா­ளரின் வர்த்தக நிலை­யத்தில் வைத்து மிகுதி 45 ஆயிரம் ரூபாவை பெற்­றுக்­கொள்ள முயற்­சித்த வேளையில் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது­செய்­யப்­பட்டார்.

இவ்­வாறு நேற்று காலை 9.57 மணி­ய­ளவில் கைது­செய்­யப்­பட்­ட­வரை தொடர் விசா­ர­ணை­க­ளுக்­குட்­ப­டுத்­தி­யுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
-vidivelli