குறுஞ்செய்தி பிறருடைய தொ.பே. இலக்கத்தை தவறாக பயன்படுத்தும் செயலிக்கு தடை


பிறருடைய தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு அழைப்பு விடுக்கும் மற்றும் குறுந்தகவல் அனுப்பும் விசேட செயலி (எப்) பாவனையை நாட்டுக்குள் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக

தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இதுபோன்ற செயலியைப் பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

இச்சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தமைக்காக தனியார் தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட அமைச்சர், இன்னும் ஓரிரு வாரங்களில் இச்செயலி பாவனை நாட்டுக்குள் முற்றாக செயலிழக்கச் செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்