நாட்டிற்கு வெளியே சென்று, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் நிலைமை வருமா..?


-Inaas-
கண்டியிலும், கண்டிக்கு அண்மையில் உள்ள பிரதேச மக்களும் இம்முறை தமது உழ்ஹிய்யாக கடமைகளை கண்டிக்கு வெளியில் நிறைவேற்றுமாறும் உழ்ஹிய்யா இறைச்சிகளை கண்டி பிரதேசத்துக்குள் கொண்டு வர வேண்டாம் எனவும்அகில இலங்கை ஜமியதுல் உலமா கண்டி கிளை
உத்தியோபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்படியான நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் ஏன் நாம் ஷரீஆவுக்கு உட்பட்ட வகையில் மாற்றீடுகள் பற்றி சிந்திக்க கூடாது..?
கீழ்வரும் மார்க்கத்தின் ஷரீஆவுக்கு உட்பட்ட மாற்றீட்டை கண்டி மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.
அவர்களுக்கு மாட்டை வணங்குவதனை விட முடியாது, எங்களுக்கு மாட்டை அறுப்பதனை விட முடியாது. ஏன் இந்த பிடிவாதம்..? நாம் தொடர்ந்தும் ஒரு சில மத்ஹப்களில் மட்டும் சுருங்கியிருந்தால், இதே செய்தி இன்னும் சில ஆண்டுகளில் இப்படி வரும்..


உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற விரும்பும், இலங்கை முஸ்லிம்கள் இலங்கைக்கு வெளியே சென்று தமது உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றிவிட்டு வரவும். இலங்கைக்குள் இறைச்சி கொண்டு வருவதனை தவிர்க்கவும் (அகில இலங்கை ஜமியதுல் உலமா வேண்டுகோள்)
ஆகவே இப்படியான விபரீத நிலை, முழு இலங்கை நாட்டிலும் உருவாக முன்னர், நாம் சிறுபான்மையாக வாழ்கிறோம், என்பதனை கவனத்தில் கொண்டு ஷரீஆவின் பரந்த விரிந்த தன்மையை கவனத்தில் கொண்டு இவ்வாறான சூழல்களில் மதிநுட்பத்துடன் செயலாற்ற முன்வருவோம்...
உழ்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும் என்ற நூலில் இருந்து பெறப்பட்ட
ஒரு பகுதியை சமூகத் தேவை கருதி பகிர்கிறேன்.
இந்தக் கருத்து இஸ்லாத்துக்கு புதிய கருத்து அல்ல, இங்கு குறிப்பிட்டுள்ள பெரும் இமாம்கள் உட்பட இன்னும் பல இமாம்கள் இந்த நிலைபாட்டிலேயே உள்ளனர். அவர்களின் கருத்தையே இங்கு பதிகிறோம்.


இமாம் மாலிக்,
அபூ தெளர்
இமாம் இப்னு ஹஜ்ம்
இமாம் ஷஃபியின்
இமாம் முஹம்மத் இப்னு அஹ்மத் அன்ஸாரி அல் குர்துபி


இப்னு அல் முன்திர் கூறுகிறார்;
பிலால் (ரலி) அவர்களிடமிருந்து நாம் ரிவாயத் செய்கிறோம்: அவர் கூறினார்:
'நான் உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது
ஒரு சேவலைத் தவிர வேறெதுவுமல்ல ஆயினும் பொருட்படுத்தமாட்டேன்.
அதனை ஒரு வறுமைப்பட்ட அநாதைக்கு வழங்குவது அதனை உழ்ஹிய்யா கொடுப்பதை விட எனக்கு மிகவும் விருப்பமானது.


சதகா கொடுப்பது சிறந்தது
என்ற இக் கருத்து இமாம் ஷஃபியின் கருத்தாகும்.
இமாம் மாலிக்
அபூ தெளர் என்போரும் இக் கருத்தைக் கொண்டுள்ளனர்.
இமாம் இப்னு ஹஜ்ம் தனது நூலான முஹல்லாவிலும் பிலால் (ரலி) அவர்களின் இக் கருத்தைக் கொண்டு வருகிறார்.
அத்தோடு அக் கருத்தை ஒட்டிய வகையில் இன்னொரு கருத்து எனக் கூறிவிட்டு கீழ்வருமாறு கூறுகிறார்:
'சாப்பிடத்தக்க அனைத்து பிராணிகளையும் அது நான்கு கால் மிருகமாக இருந்தாலும் பறவையாக இருந்தாலும் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியும்.'
பிலால் (ரலி) அவர்கள் குறித்த ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ரிவாயத் முஸன்னப் – அப்துர் ரஜ்ஜாக் என்ற ஹதீஸ் நூலில் வந்துள்ளது. (8156) (385ஃ 4) عبدالرزاق – المصنف)
இந்த ரிவாயத்தில் பிலால் (ரலி) அவர்கள் அதன் பெறுமானத்தை ஸதகா செய்ய முடியும் எனத் தெளிவாகவே சொல்கிறார்கள்.


1. பார்க்க: பத்ஹ் அல் பாரி: பாகம் 10 பக்: 05
2. பார்க்க: இமாம் நவவி – அல் மஜ்மூஉ: வா: 9 பக்: 288 – 294
3. இமாம் குர்துபி: அல் ஜாமிஉ –லி- அஹ்காமில் குர்ஆன். பாகம்: 08 பக் 71
4. பார்க்க: இமாம் நவவி: கிதாப் அல் – மஜ்மூஃ வா: 09 பக் 338