பதுளையில் கோர விபத்து.


பதுளை அலுகொல்ல பகுதியில் இன்று காலை அரசு பயணிகள் பேருந்தொன்று கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் சம்பவ இடத்திலையே இளைஞர் ஒருவர் பலியானதாகவும் மேலும் 27 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பேருந்தானது கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை குறித்த காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை.