"ஹாஹா .... நான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத்தான் நீங்க மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தீர்கள்... ஹக்கீம் மனோவை நோக்கி ரணில்.



ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை கட்­சி­யாகப் பதிவு செய்­வ­தற்கும் எதிர்­வரும் தேர்­தல்­களில்
அம்­முன்­ன­ணி­யூ­டாக போட்­டி­யி­டு­வ­தற்கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட் சித் தலை­வர்கள் தீர்­மா­னித்­துள்­ள னர். எனவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை அர­சியல் கட்­சி­யாக பதி­வு­செய்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­ரம மற்றும் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தலை­மையில் குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. அதில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­க­ர­ம­சிங்க, தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, அகி­ல­விராஜ் காரி­யவம், மலிக் சம­ர­விக்­ரம, அர்­ஜுண ரண­துங்க உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அதன்­போது எதிர்­வரும் தேர்­தல்­களில் எவ்­வாறு போட்­டி­யி­டு­வது குறித்து ஆரா­யப்­பட்­டது. எனவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை கட்­சி­யாகப் பதிவு செய்­வது அத­னூ­டாக தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வது பற்­றியும் கவனம் செலுத்­தப்­பட்­டது. அந்த யோச­னைக்கு கட்சித் தலை­வர்கள் இணக்கம் தெரி­வித்­த­தற்கு அமை­வாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை கட்­சி­யாகப் பதிவு செய்யத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் எதிர்­வரும் தேர்­தல்­களில் அம்­முன்­ன­ணி­யூ­டாக தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கும் சகல கட்சித் தலை­வர்­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை பதிவு செய்யும் நட­வ­டிக்­கை­க­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­யவம் மற்றும் அமைச்சர் மலிக்­ச­மர விக்­க­ரம தலை­மையில் குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­குழு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை பதி­வு­செய்யும் வேலைத்­திட்­டங்­களை உடன் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

மேலும் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை கடந்த வாரம் சந்­தித்து மாகாண சபைத் தேர்­தலை விகி­தா­சார முறையில் நடத்­து­வது குறித்து கலந்­தா­லோ­சித்­த­தா­கவும், அதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இணக்கம் தெரி­வித்­தி­ருந்­த­தா­கவும் நேற்­றைய சந்­திப்­பின்­போது பிர­த­ம­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் அது தொடர்­பி­லான செய்­திகள் வாராந்த சிங்­கள பத்­த­ரி­கை­களில், எதிர்­வரும் வரவு செலவுத் திட்­டத்தில் எதி­ராக வாக்­க­ளித்து அர­சாங்­கத்தை கவிழ்த்து மஹிந்த தலை­மை­யி­லான ஆட்சி உரு­வாக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­த­தா­கவும் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அதை செவி­ம­டுத்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல­மாக சிரித்தார். அத்துடன் “நான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத்தான நீங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தீர்கள். ஆகவே அதை என்னிடமே தற்போது தெரிவிக்கிறீர்கள்” என அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களை சுட்டி தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிரித்தமையும் குறிப்பிடத்தக்கது.