முதல்முறையாக சிறிலங்கா வரும், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்


ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.


கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் நாள் தொடக்கம், 22 ஆம் நாள் வரை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார்.


ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.


இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, ஜப்பான் – சிறிலங்கா பாதுகாப்பு உறவுகள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்துவார்.


கொழும்புக்கு வெளியே களப் பயணங்களை மேற்கொள்வதற்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.


இந்தப் பயணம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விரிவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்று ஜப்பானிய தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது