தந்தை மற்றும் மகள் சடலமாக மீட்பு.. உடலில் இருந்து கிருமிநாசினி வாசம்.


மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த தந்தை மற்றும் மகளின்
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

31 வயதுடைய தந்தை மற்றும் 11 வயதுடைய மகள் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

இருவரின் உடலில் இருந்தும் கிருமிநாசினி வாசம் அடிப்பதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாக விசமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.