துருக்கி இரான் மீதான பொருளாதார தடை இலங்கை மீதும் தாக்கம் செலுத்துமாம் ; பிரதமர் கூறுகிறார்.துருக்கி மற்றும் இரான் மீது அமெரிக்காவிதித்துள்ள பொருளாதார தடையின்தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிக்கும் எனபிரதமர் ரனில் விகரனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைகுறிப்பிட்டார்.அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,துருக்கி மற்றும் இரான் மீது அமெரிக்காவிதித்துள்ள பொருளாதார தடையின் தாக்கம்இலங்கையிலும் பிரதிபலிக்கும் இதற்கு முகம்கொடுக்க நாம் எம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார் .2025 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் கடன்சுமையில் இருந்து மீள முடியுமென அவர் மேலும்குறிப்பிட்டார்.