இள வயதுத் திருமணமும் அதன் விளைவுகளும் சம்மந்தமான செயலமர்வு.

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கிராம
சேவகப் பிரிவில் இள வயதுத் திருமணமும் அதன் விளைவுகளும் சம்மந்தமான உளவளத்துணை செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள், வலுவூட்டல் அமைச்சினால் குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இளவயது திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் உளரீதியான தாக்கம், குடும்ப வன்முறை உட்பட பல விடயங்கள் இதன்போது பேசப்பட்டுள்ளன.


மேலும், நிகழ்வில் வளவாளராக கிண்ணியா பிரதேச செயலக உளவளத்துனை ஆலோசகர் றியாத் ஹஸன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ஐயூப், பொளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.