மழை காலநிலையால் ஆறுகள் நிரம்பி வழியும் கண்டிப்பிரதேசத்தில், பொல்கொல்லை மகாவலி ஆற்றில் மிதந்து வந்த சடலம்.(மொஹொமட் ஆஸிக்)​
கண்டிப்பிரதேசத்தில் மழை பெய்து ஆறுகள் நிரம்பி வழியும் நிலையில் மகவலி ஆற்றில்
மிதந்து வந்த சடலம் ஒன்றை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் இன்று 14 காலை கண்டெடுத்துள்ளனர்.

கண்டி பொல்கொல்லை பிரதேசத்தில் மஹாவலி ஆற்றில் ஒன்று சேர்ந்துள்ள குப்பைகளுக்குள் இச் சடலம் கானப்படுள்ளதுடன் இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலீஸாருக்கு தகவல் கொடுத்த பின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச் சடலம் ஓரளவு பழுதடைந்துள்ளதுடன் சடலத்தை கரைக்கு எடுக்கும் வரை அதன் அங்க அடையாலங்கள் குறிப்பிட முடியாது எனவும்பொலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான் விசாரணைக்கு கண்டி பிரதான நீதவானுக்கு அறிவித்துள்ளதாகவும் அவரின் பார்வைக்கிப் பின்னர் சடலத்தை கறைக்குகொண்டு வர உள்ளதாகவும்பொலீஸார் தரிவித்தனர்.