நான் ஆரம்பித்து வைத்த இலவச சுகாதார சேவைகளை இன்று சர்வதேசம் முதல் பாராட்டுகின்றது ;யாழ்ப்பானத்தில் சுகாதார அமைச்சர்
வடக்கு மக்களுக்கான அனைத்து சுதந்நிரத்தையும்


வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதாக சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்ப்பான போதனா வைத்தியசாலையில் நேற்று (16) பிற்பகல் இடம் பெற்ற நிகழ்வின் போது மேற்கண்டவாறு கூறினார்.
ரூபாய் 530 மில்லியன் செலவில் அமைக்கப்படுகின்ற மீள்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மற்றும் சுகாதார அமைச்சினால் 600 மில்லியன ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட தாதியர் விடுதித் திறப்பு விழா சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம் பெற்றது

அதன் பிற்பாடு இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது

'யாழ்ப்பான போதனா வைத்தியசாலையில் இதுவரைக்கும் 73 வைத்தியர்களின் குறைபாடு இருப்பதாக நான் அறிந்து கொண்டேன். இந்தக் குறைபாட்டின் 33 வைத்தியர்களை அவசரமாக பெற்றுத் தருவேன். வைத்திய உதவியாளர்கள் 62 பேரை நாளைய நாள் பெற்றுத் தருவேன். மகப்பேற்று பிரிவொன்றினை நிர்மானிப்பதற்கு எனது அனுமதியினை வழங்வதோடு, யாழ்ப்பான கிறிஸ்தவ தேவாலயத்தினால் யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி வேளைத் திட்டங்களுக்காக பெற்றுத் தந்த நிலத்தினை இட்டு கிறிஸ்தவ தேவாலயத்தின் மதகுருமார்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது நன்றியினை தெரிவிக்கிறேன்.
இருதய நோய் சிகிச்சைப் பிரிவினை நிர்மானிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். வடக்கின் சுகாதார அபிவிருத்தி வேளைத்திட்டங்களுக்காக பல பில்லியன் முதல்கள் வருடந்தோரும் வழங்கி வருகிறேன். அரசியல் வாதிகளாகிய எங்களது கடமை அவசியமான அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்து கொடுப்பது, அதேபோல் வடக்கு மக்களுக்காக தாதிமார்களது சுகாதார சேவைகளை பெற்றுத் தர முடியும். நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மக்களது அனைத்து விதமான சுதந்திரத்தினையும் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
நான் இன்று சந்தோசப்படுகின்றேன். வடக்கு மக்கள் சுயமாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள், தெற்கு மக்களைப் போன்றே இவர்களுக்கும் இது சம்மந்தமாக உரிமை இருக்கின்றது. இன்னொரு புறத்தில் இது பூரண சுதந்திரத்தை சுவாசிப்பதனை தெளிவாக காட்டிநிற்கின்றது. 30 வருட யுத்தத்தினால் இவர்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போனது. இன்று அது கிடைக்கப் பெற்று இருக்கின்றது.
நாங்கள் இன்று 21ஆம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கின்றோம். கலந்துரையாடல் மூலம் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். எனது வாழ்க்கையில் சிங்களம். தமிழ், முஸ்லிம் போன்ற அனைத்து மக்களுக்காகவும் குறலெலுழுப்பி இருக்கின்றேன். அனைத்து மக்களுக்குமான முழுமையான போதனா வைத்தியசாலையாக யாழ்ப்பான வைத்தியசாலையை பெற்றுத் தருவதே எனது முக்கிய நோக்கமாகும். நான் ஆரம்பித்து வைத்த இலவச சுகாதார சேவைகளை இன்று சர்வதேசம் முதல் பாராட்டுகின்றது.
யாழ்ப்பான போதனா வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்தது, அனைத்து இலங்கை மக்களுடைய முழுமையான சுகாதார சேவையினை வழங்குவது, அத்திவசியமான 48 மருந்து வகைகளது விலை குறைப்பினால் மக்களுக்கு சேவையாற்றியது, உலக சுகாதார அமைப்பின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டது போன்ற காரணங்களுக்காக வடக்கு மக்களது கொளரவத்தினை நினைவுச் சின்னமாக சுகாதார, போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டீ.சத்தியமூர்த்தி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காஸிம், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய விஜயகலா மகேஸ்வரன், மா.வே.சேனாதி ராஜா, எஸ்.சரவனபவன், வட மாகாண சபை அமைச்சர்கள். உறுப்பினர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அணில் ஜயஸிங்க மற்றும் பிரதிப் பணிப்பாளர்கள், பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர் டீ.சத்தியமூர்த்தி, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சரத் லியனகே, முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.எம்.ரூமி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.