கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மிட்பு

( இரோஷா வேலு )

காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகளை நேற்று சனிக்கிழமை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட நான்கு பொதிகளில் வெவ்வேறு அளவுகளையுடைய 39 சிறிய பொதிகள் காணப்பட்டுள்ளன. இந்த பொதிகள் அனைத்தினதும் மொத்த நிறை 83.5 கிலோவாகும்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேகசன்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொதிகளை பரிசோதனையிட்ட போது அவை கடற்பரப்பில் மிதக்க கூடிய வகையிலும் நீர் உட்புகாமலும் மிகவும் பாதுகாப்பாக பொதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவற்றுக்கான சொந்தக்காரர் யார் என்பது கண்டறியப்படாத நிலையில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இந்நிலையில் அனைத்து பொதிகளையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஒப்படைத்துள்ள காங்கேகசன்துறை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.