வெலிகம பிரதேசத்தில் புகையிரத நிலைய மற்றும் தபால் நிலைய பதாதைகள் தற்காலிகமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.


இந்திய திரைப்பட மற்றும் ஐரோப்பிய திரைப்பட இயக்குனர்களினால் தயாரிக்கப்படும் ஒரு திரைப்பட காட்சி வெலிகம பிரதேச புகையிரத நிலையத்தை மையமாக வைத்து படமாக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தற்காலிகமாக பெயர் பதாதைகள் மாற்றப்பட்டுள்ளது


இதற்காக இலங்கை புகையிரத திணைக்கலத்திற்கு 3.8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வெலிகம பிரதேசத்தில் மூன்று நாட்களில்   6 காட்சிகள் படப்பிடிப்புக்கள் மேற்கொள்வதாக திரைப்பட இயக்குனர் எமது வெலிகமநியூஸ் சேவைக்கு தெரிவித்தார்.
அதேவேளை இத் திரைப்படம் ஐரோப்பிய நாடுகளில் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
ரயில் பெட்டி நடமாடும் வைத்தியசாலை என்றவகையில் இக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது


திரைப்பட காட்சியில் இவ் ரயில் பெட்டிகள் இன்று காலி நோக்கி புறப்படும் அதில்
அங்கவீனர்கள் சுகயீனமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு புகையிரதத்தில் ஏற்றி செல்லப்படவுள்ளனர் அதில் ஒருவருக்கு தலா 2500 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

www.weligamanews.com