ஐபோன் உட்பட அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிக்கவும்... துருக்கி ஜனாதிபதி எர்துகான் நாட்டு மக்களிடம் வேண்டுகோள்.ஐபோன் உட்பட அமெரிக்காவின் இலத்திரனியல் பொருட்களை புறக்கணிக்குமாறு துருக்கி ஜனாதிபதி எர்துகான் நாட்டு

மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிப்பதுடன் குறிப்பாக ஐபோனை புறக்கணிக்கவும் எனவும் அவர்களிடம் ஐபோன் உள்ளதென்றால், மறுபக்கத்தில் சாம்சுங் மொபைல் உள்ளது.அத்துடன் துருக்கி நாட்டின் ஸ்மார்ட்போனாக உள்ள Vestel எனப்படும் ஸ்மார்ட்போன் உள்ளது இதனை கொள்வனவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது ஒரு பொருளாதார யுத்தம் எனவும் துருக்கி நாணயத்தை அதிகமாக தமது உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு செலவழிக்குமாறும் அதனால் நாட்டின் நாட்டின் பொருளாதார சுதந்திரம் அதிகரிக்கும் எனவும் துருக்கி தலைவர் மீண்டும் தெரிவித்துள்ளார் .

இன்று உரை நிகழ்த்திய அவர் எமது நாடு இதன் பிறகு ஆப்பிள் தயாரிப்புகள் அல்லது அமெரிக்க இலத்திரனியல் பொருட்களை வாங்குவத தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

துருக்கி நாட்டு நாணயமான லீராவின் பெருமதி குறைந்ததை அடுத்து இவ்வாறான ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

இது எவ்வகையில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க முடியாமல் உள்ளது.

நாங்கள் சிறப்பான பொருட்களை உற்பத்தி செய்கிறோம் அதே போல் நாட்டு மக்களுக்கு சிறந்த பொருட்களை இனி வைக்கிறோம் இறக்குமதி செய்வதை விட இது சிறந்தது.

எமது நாட்டின் நாணயத்தின் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார் துருக்கி மக்கள் ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும் இவர் 2016 ஆம் ஆண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்