ஜனாதிபதி வேட்பாளராக UNP என்னை நிறுத்தினால் அந்த சவாலை ஏற்க நான் தயார் ..
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தகுதியை தனக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிதீர்மானிக்குமாக இருந்தால் அந்த சவாலை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இது கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்மானம் எனவும் அவர் கூறியுள்ளார்.

30 வருட யுத்தத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய நான், தொடர்ந்தும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் இந்த சவாலை பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.