Breaking

Wednesday, September 26, 2018

10.000 உல­மாக்கள் குழம்பிப் போய், 200 மத்­ர­ஸாக்கள் நிலை தடு­மா­றி­யுள்­ளன - ரிஸ்வி முப்தி கவலை


சலீம் மர்சூப் தலை­மை­யி­லான பிரி­வினர் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஷாபி மத்­ஹ­புக்கு மாற்­ற­மான திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­துள்­ள­தனால் இந்­நாட்டில் உள்ள 10 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட உல­மாக்கள் குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள். 200 க்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்கள் நிலை தடு­மா­றி­யுள்­ளன என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.


நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு குழு­வி­னரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்கை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.தொடர்ந்தும் அவர் ‘விடி­வெள்ளி’ க்கு கருத்து தெரி­விக்­கையில்;


“எமது நாட்டில் ஷாபி மத்ஹப் 1000 வரு­ட­கால வர­லாற்­றினைக் கொண்­ட­தாகும். மிகவும் விசா­லத்­தன்­மை­யா­ன­தாகும். ஷாபி மத்­ஹபின் விசா­லத்­தன்மை கார­ண­மாக ஹனபி, ஹம்­பலி, மாலிகி இமாம்­களின் கருத்­து­க­ளையும் தாரா­ள­மாக உள்­வாங்­கிக்­கொள்ள முடியும்.


அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றது. எந்தச் சவால்­க­ளையும் எதிர்­கொள்ள தயா­ராக இருக்­கி­றது. 8½ வரு­ட­கால குழுவின் அமர்­வு­களில் எல்லா விட­யங்­க­ளிலும் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­பட்­டுள்­ளது. உலமா சபை குழு­வுடன் ஏழு கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்­ளது. உலமா சபையின் பத்­வாக்­குழு கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது தெளி­வு­களை வழங்­கி­யுள்­ளது.


எமது நாட்டில் 1000 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ஷாபி மத்­ஹ­புக்கு முர­ணல்­லாத மற்றும் ஷரீ­ஆ­வுக்கு முர­ணல்­லாத திருத்­தங்­க­ளுக்கு உலமா சபை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. மத்தா (நஷ்­ட­ஈடு) விவா­க­ரத்­தின்­போது பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். மற்றும் காதி நீதி­மன்­றங்­களில் முஸ்லிம் பெண்கள் ஜுரிக­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும். காதி ஆலோ­சனைச் சபையில் பெண்கள் நிய­மனம் பெற வேண்டும் எனும் விட­யங்­களில் உடன்­பட்­டுள்­ளது.


அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தனது நிலைப்­பாட்­டி­னையும் சிபா­ரி­சு­க­ளையும் 2010 ஆம் ஆண்­டி­லேயே குழுத் தலைவர் சலீம் மர்­சூ­பிடம் தெரி­வித்­து­விட்­டது. அன்று கொழும்பு ரன்­முத்து ஹோட்­டலில் நடை­பெற்ற கூட்­டத்தில் பத்­வாக்­குழு தனது நிலைப்­பாட்­டினை தெளி­வாக விளக்­கி­விட்­டது. தனது நிலைப்­பாட்­டினை அன்று உலமா சபை தனது ஏனைய அங்­கத்­தி­ன­ருக்கோ, ஊட­கங்­க­ளுக்கோ கூட தெரி­விக்­க­வில்லை. 2017 இல் உல­மாக்கள் அடங்­கிய தரப்பு சலீம் மர்­சூ­பிடம் 90 பக்­கங்கள் அடங்­கிய அறிக்­கையை கைய­ளித்­தது.


இன்று பல்­வேறு தரப்­புகள் உலமா சபை மீது குற்­றங்­களைச் சுமத்தி வரு­கின்­றன. உலமா சபை திருத்­தங்­களை விரும்­ப­வில்லை. எதிர்க்­கி­றது என்று கூறி வரு­கி­றார்கள். மக்­களைத் திசை திருப்­பு­வ­தற்குப் பள்­ளி­வா­சல்கள் உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­து­கி­றார்கள்.


சலீம் மர்சூப் தயா­ரித்­துள்ள அறிக்கை 100 வீதம் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­தெ­னவும் பள்­ளி­வாசல் மிம்­பர்­களில் இது பற்றி தவ­றாகப் பிர­சங்கம் செய்­யப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கி­றார்கள்.


பள்­ளி­வா­சல்­களும் மிம்­பர்­களும் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­ன­வே­யன்றி மக்­களை வழி­கெ­டுப்­ப­தற்­கல்ல.


ஷாபி மத்­ஹப்தான் எமது நாட்டில் பிரச்­சினை என்­கி­றார்கள். பள்­ளி­வா­சல்கள் மக்­களைக் குழப்­ப­வில்லை. பொது­ப­ல­சேனா அல்­லாஹ்­வையும் நபிகள் நாய­கத்­தையும் அவ­ம­தித்துப் பேசி­விட்டு பின்பு அவ்­வாறு நாங்கள் அல்­லாஹ்­வையும் நபிகள் நாய­கத்­தையும் அவ­ம­திக்­க­வில்லை என்று கூறு­வ­தற்கு அவர்­களின் கூற்று சம­மாகும்.


உல­மாக்கள் ஒன்­றுமே அறி­யா­த­வர்கள் என்று சிலர் நினைக்­கி­றார்கள். இன்று மார்க்­கத்தின் தூண்­க­ளாக நிற்­ப­வர்கள் உல­மாக்­களே. அவர்­களை குறைத்து மதிப்­பிட எவ­ராலும் முடி­யாது.


முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வி­னாலே குழு நிய­மிக்­கப்­பட்­டது. குழுவில் பெண்கள் நிய­மிக்­கப்­பட்­டது தொடர்பில் நாம் எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை என்று தெரி­விப்­பது நகைப்­புக்­கு­ரி­ய­தாகும். அவ்­வாறு கூறு­வ­தற்கு உலமா சபைக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை.


இலங்­கையில் மஸ்­ஜி­து­களில் ஆமீன் கூறும்­போது உரத்த குரலில் இமாம் உட்­பட தொழு­கையில் ஈடு­ப­டு­ப­வர்கள் கூறு­வார்கள். இது எமது நாட்டின் ஆயிரம் வருட காலம் பழைமை வாய்ந்த ஷாபி மத்­ஹபின் வழ­மை­யாகும்.


இதேபோல் சூரத்துல் பாத்­தி­ஹாவை இமாம் ஓது­வது போன்று அவரைப் பின்­பற்றி தொழக்­கூ­டிய ஒவ்­வொ­ரு­வரும் ஓது­வார்கள்.


ஆனால் ஹனபி மத்­ஹபில் உரத்­த­கு­ரலில் ஆமீன் கூறு­வ­தில்லை. அத்­தோடு சூரத்துல் பாத்­தி­ஹாவை இமாமை பின்­பற்றி தொழு­ப­வர்கள் ஓதக்­கூ­டாது. தற்­போது எமது நாட்டில் 1000 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ஷாபி மத்ஹப் பின்­பற்­றப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் இதை நீக்கு என்று சொன்னால் ஆமீன் பல­மாகக் கூறாதே என்றும் சூரத்துல் பாத்­தி­ஹாவை பின்னால் ஓதாதே என்று சொன்னால் நாட்­டி­லுள்ள இமாம்கள், உலமாக்கள் சகிப்பார்களா?


பெண்கள் திருமணம் செய்யும்போது ‘வொலி’ அவசியம் என ஷாபி மத்ஹபில் தெரிவித்திருக்கும்போது அதை நீக்கு என்றால் உலமாக்கள் நாட்டு மக்கள் தாங்கிக்கொள்வார்களா?


ஷாபி மத்ஹபுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய சிபாரிசுகளை வெளியிட வேண்டாம். அதனால் பிரச்சினைகளே உருவாகும் என்று நாம் கூறினோம். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு அதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனாலேயே முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன” என்றார்.