இன்று, இலங்கை பொலிஸூக்கு 152 வருடங்கள் நிறைவுஇன்று, இலங்கை பொலிஸூக்கு 152 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்கருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.


152ஆவது ஆண்டை கொண்டாடும் இலங்கை பொலிஸ் பொதுமக்கள் நட்புறவு பொலிஸாக முன்னெடுக்கப்படும் என்று தேசிய பொலிஸ் பயிற்சி நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான தினேப் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பொலிஸாருக்கு தொழில் தொடர்பான அறிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்துவதற்கான கல்வி நடவடிக்கைகள் பலவும் இதில் உள்ளடங்கியுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.