சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் 2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்ததை
அடுத்து, அந்த வழக்கில் சிக்கிய 2,000 குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க கஜகஸ்தான் அரசு அதிரடி முடிவு மேற்கொண்டுள்ளது.

கஜகஸ்தான் நாட்டுல் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகிறது. வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு இந்த ஆண்டு துவக்கத்தில் கஜகஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. ஜகஸ்தான் நாட்டை பொறுத்தமட்டில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடும் சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்றங்களின் எண்ணிக்கையில் எந்த மாறுதலும் இல்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளனர். 2010 முதல் 2014 வரையான நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,000 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோக வழக்குகள் கஜகஸ்தான் நாட்டில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்ததாலையே அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு என கஜகஸ்தான் அரசு சுமார் 2 மில்லியன் டாலர் அளவுக்கு நிதியும் ஒதுக்கியுள்ளது. மட்டுமின்றி அங்குள்ள ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. சைப்ரொடெரோன் (Cyproterone) என்ற மருந்தையே இதற்கென்று பயன்படுத்த உள்ளனர். இதனால் அறுவைசிகிச்சை ஏதும் மேற்கொள்ள தேவையில்லை சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆண்மை நீக்கம் செய்துகொள்ள சிறப்பு மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு சிறுவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபர் ஒருவருக்கு முதன் முறையாக ஆண்மை நீக்கம் செய்யபட உள்ளது. சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் குறித்த நபருக்கு ஆண்மை நீக்க மருந்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது