2025 ஆம் ஆண்டுவரை மைத்திரியே, ஜனாதிபதியாக நீடிப்பார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, 2025 ஆம் ஆண்டுவரையில் ஜனாதிபதியாக நீடிப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


2020க்கு பின்னரும் ஜனாதிபதி பதவியில் மைத்திரிபால சிறிசேன நீடிப்பார் என உறுதியாக கூற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மைத்திரிபால சிறிசே​னவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான பொறிமுறை ஒன்றும் தங்களிடமிருப்பதாக கூறியுள்ள அவர், ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.