அவசரமாக தரையிறங்கியது A- 380 ஏயார் பஸ்


A- 380 ஏயார் பஸ் ரக விமானமொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து அபுதாபி நகரை நோக்கி பயணித்த எத்திஹாட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான A- 380 ஏயார் பஸ் விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட குறித்த விமானத்தில் 455 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானத்திற்கு தேவையான 40 ஆயிரம் லீற்றர் எரிப்பொருள் நிரப்பப்பட்டதை தொடர்ந்து, குறித்த விமானம் அதிகாலை 6.11அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அபுதாபி நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.