Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 4 சிறுவர்கள் உயிரிழப்பு


டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அசோக் விஹார் பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் ஒரு பெண்ணும் 4 சிறுவர்களும் உயிரிழ்ந்து உள்ளனர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 பேர் காயம் அடைந்துள்ளனர், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது, பொலிஸ் மற்றும் தீயணைப்பு படை மீட்பு பணியை தீவிரப்படுத்தியது. இதற்கிடையே இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவும் மீட்பு பணியில் இணைக்கப்பட்டது.

கட்டடம் 20 வருடங்கள் பழமையானது என்றும் அதனுடைய கட்டமைப்பு வலிமையற்று காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.