குவைத் தம்பதியினருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால சிறை தண்டனை.

வளர்ப்பு நாயை கொண்டுவந்த விவகாரத்தில் சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை கட்டுநாயக்க
விமானநிலையத்தில் வைத்து தாக்கிய குவைட் நாட்டு தம்பதியினர் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நீர்க்கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
பணிக்கு இடையூறு விளைவித்தமை, அதிகாரிகளை மதிக்காமை மற்றும் அவர்களை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவர்களுக்கு இதற்கு முன்னர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி அவர்கள் சுங்த திணைக்கள அதிகாரிகளை தாக்கியமையை அடுத்து, கைது செய்யப்பட்ட நிலையில் ல் பிணையில் விடுதலையாகியிருந்தனர்.