எமக்கு எதிராக செயற்பட்டால், அடித்து முடித்து விடுவோம் - பிறகு இந்நாட்டில் எவரும் இருக்க இடமளிக்க மாட்டோம்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தேவையானதை இந்த நாட்டில் செய்ய இடமளிக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


இது தமிழ் மக்களின் வாக்குகளை பெற மேற்கொள்ளும் நடவடிக்கை. பிரபாகரனுக்கு தேவையானதை இந்த நாட்டில் செய்ய நாங்கள் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டோம். தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்த்து வாழ முடியும். முஸ்லிம் மக்களும் எங்களுடன் கை கோர்த்து இருக்க முடியும்.


ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் இந்த நாட்டை பிரிக்க முடியாது. அவர்களுக்கு தேவையானதை செய்ய இடமளிக்க முடியாது. இது சிங்கள பௌத்த தர்மம் உள்ள நாடு. இதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


கத்தோலிக்கர்கள், பௌத்தர்கள் என இந்த நாட்டில் 76 வீதம் சிங்கள மக்கள் இருக்கின்றனர். உலக நாடுகளை பாருங்கள்.


உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், அமெரிக்கன். இந்தியா இந்து மொழி. இந்தியா புத்த பகவான் பிறந்த நாடு. தமது நாட்டின் அடையாளம். இலங்கையின் அடையாளத்தை இல்லாமல் செய்ய முடியாது.


ஆட்சியாளர்களுக்கும், கூட்டு எதிர்க்கட்சியினருக்கு முதுகெலும்பில்லை. நான் வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவேன். வீர துட்டுகெமுனு (துட்டகைமுனு) அமைப்பின் கீழ் முதலாவதாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவோம்.


பிரச்சினைகள் உள்ள, உடைந்த கட்சிகளுக்கு நான் செல்ல மாட்டேன். எனது உடலில் ஓடுவது சிங்கள இரத்தம். சகல இனங்களும் நமது நண்பர்கள் என புத்த பகவான் போதித்துள்ளார்.


அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்க வேண்டும். பௌத்த தர்மத்தின் படி எங்களிடம் விரோதங்கள் இல்லை. குரோதங்கள் இல்லை.


தமிழ், முஸ்லிம் மக்களை இரண்டு கைகளில் பிடித்து கொண்டு, பறங்கியர், மலாயர்களுடன் ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், எமக்கு எதிராக செயற்பட்டால், துட்டகைமுனு மன்னர், எல்லாளனுக்கு செய்தது போல், அடித்து முடித்து விடுவோம். அதற்கு பிறகு இந்த நாட்டில் எவரும் இருக்க இடமளிக்க மாட்டோம். இது எனது கருத்துக்கள் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.