முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...!


திகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கான சிங்கள இளைஞர்களை சிறையில் போட காரணமாக இருந்தவர் இந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவே என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மஹிந்த ஆதரவு குழு பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மம்பில தெரிவித்தார்.


இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.


இந்த நாலக்க டி சில்வா தான் கிரிபத்கும்புரே சோபித்த தேரரின் வயிற்றுப் பகுதிக்கு காலால் உதைத்தவர்.


அத்துடன், சிறையிலுள்ள மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவிடம் திகன சம்பவத்தின் பின்னால் இருந்தவர் கோட்டாபய என வாக்கு மூலம் ஒன்றை வழங்குமாறு இந்த டீ.ஐ.ஜி. நாலக்க சில்வா வற்றுபுத்தியுள்ளார். அவ்வாறு வாக்கு மூலம் வழங்கினால் அமித் வீரசிங்கவை விடுதலை செய்வதாகவும் நாலக்க சில்வா கூறியுள்ளார். விடுதலை செய்வது மட்டுமல்ல வெளிநாட்டில் குடும்பத்துடன் சென்று தங்குவதற்கு வசதி செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவங்களின் மூலம் தெளிவாக ஒன்று தெளிவாக விளங்குகின்றது. அதுதான், இந்த டீ.ஐ.ஜி. நாலக்க டி சில்வா என்பவர் கோட்டாபயவுக்கு எதிரானவர் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.