முஸ்லிம் மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்காக கொழும்பில் முஸ்லிம் பாடசாலை ஒன்று அமைக்க நடவடிக்கை.,


கொழும்பில் முஸ்லிம் மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்காக தேவையான நடவடிக்கைகளை
வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (19) காலை மாளிகாவத்த தாருஸ் ஸலாம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெல்லவ பகுதியில் முஸ்லிம் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு இடத்தை ஒதுக்கியுள்ளதுடன் அதற்கு தேவையான ஏனைய வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொழும்பில் வாழும் முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான இடத்தினை தேட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ள பாடசாலை ஒன்று இல்லாத காரணத்தால் கல்வி நடவடிக்கைகளுக்கு அது தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான தெரிவித்துள்ளார்.