இன்றைய இரவில் நடுவீதியில் தங்கியிருக்க, மகிந்த தீர்மானம்

.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரவு முழுவதும் மக்கள் சக்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தி கொழும்பு என்ற பெயரில் மஹிந்த தலைமையிலான அணி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
கொழும்பின் பிரதான பகுதிகளை முற்றுகையிட்டுள்ள இந்த அணியினர், தற்போது லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடியுள்ளன.
மாலை வேளையில் ஆரம்பமான இந்த பேரணி, தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மஹிந்த உள்ளிட்ட அனைவரும் வீதிகளில் அமர்த்து தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று முழு இரவையும் மஹிந்த வீதியில் மக்களோடு மக்களாக கழிக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.