ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி, உடனடி விசாரணைக்கு உத்தரவு


ஜனாதிபதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயத்தில், பொலிஸ் உயரதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளமைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ்

விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியைக் கொலை செய்ய சில சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.