ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசிர்வாதத்துடனே ஜனபலய இடம்பெற்றது.


அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் ஆசிர்வாதம் இருந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, குறித்த பேரணிக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்புகளும், தடைகளும் வராமல் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையே நேற்றைய பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்திருந்ததாக” குறிப்பிட்டார்.