அல்குர்ஆன் வழியில் மூச்சுத் திணறல் (ஆஸ்த்து மா) நோய்க்கான மருத்துவம்*


  மூச்சு திணறலால் அவதிப்படுகிறீர்களா ?? (ஆஸ்த்துமா) இந் நோயினால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.


 இந்நோயைப் பொறுத்தளவில் இரண்டாக வகைப்படுத்தலாம்.

உடல் ரீதியாக {உதாரணம்; சுவசப்பைக்  கோளாறு} ஏற்படும் பிரச்சினையை முதலாவது வகையில் சேர்க்கலாம்.

 அடுத்தவிடயம் பற்றிக் கூறுவதாயின் சிலவேளை பலர் மறுக்கவும் வாய்ப்பு உண்டு.ஆனாலும் இது உண்மை.இதை உலகில் உள்ள எந்த ஒரு மருத்துவராலும் குணப்படுத்த முடியாது. இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ந்திருப்பார்கள்இதுவே இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

ஆஸ்த்துமா வியாதியைக் குணப்படுத்த முடியாது. வைத்தியர்களால் இதுவரை இதற்கான மருத்துவம் கண்டுபிடிக்க படவில்லை, ஆனால் ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளான  பல‌ர் இந்நோயினைக் கட்டுப்பா‌ட்டி‌ல் வை‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இரு‌க்கு‌ம். அ‌ப்போது உ‌ரிய மரு‌த்துவ‌ம் செ‌ய்து கொ‌ண்டு மற்றவர்களைப் போன்று சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

உங்களுக்கு ஏற்பட்ட ஆஸ்த்துமா நோயைச் சுகப்படுத்திக்கொள்ள பலவகையான மருந்துகளைப் பாவித்தும் சுகம் கிடைக்கவில்லையா ??

இப்போது விடயத்திற்கு வருகிறோம். இந்த வகையைச் சேர்ந்த ஆஸ்த்துமா நோய் ஓர் அனாமேதை நோய் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

இதனை ஆன்மீக வைத்தியம் கொண்டே சுகப்படுத்தலாம்.
இதை வாசித்திக்கொண்டு இருக்கும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், உங்கள் நோய் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு மேல் தீவீரம் அடைந்த நிலையில் இருந்தால் அல்குர்ஆனில் சூரா பகராவை ஓதி ஒரு தண்ணீர்க் கோப்பையில் இடை இடையில் ஊதிக்கொள்ளுங்கள்.அந்தத் தண்ணீரை காலை பகல் இரவு மூன்று வேளையிலும் சிறிதளவு குடித்து முகத்தையும் கழுவி மார்பிலும் சிறிதளவு பூசிக்கொள்ளுங்கள்.தொடர்ச்சியாக ஏழு அல்லது பதினான்கு அல்லது 21 நாட்களுக்கு உங்கள் நோயை பொறுத்து இதைச் செய்யுங்கள்.

 நோய் தீவிரம் இல்லை ஆயின் சூரா யாஸீனைக் கூட மேற்கூறிய முறைப்படி பயன்படுத்தலாம்.
(குர்ஆனை தர்தீபாக ஓதுவது அவசியம். நோயாளி ஓதவேண்டியது கட்டாயமில்லை வேறு ஒருவர் கூட ஓதலாம்.)


இதை செய்யும்போது ஜனாசா வீடுகள்,பொறித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ளவும்.

இது அனுபவ ரீதியான விடயம் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் ஆயின் இந்த முறையை முஸ்லீம் மதப் பெரியாரை அணுகி உதவியைப் பெறலாம்.