நவாஸ் ஷெரிப்பின் மனைவி, லண்டனில் புற்றுநோயினால் காலமானார்.


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் 'பனாமா கேட்' ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறைத்தண்டனை பெற்று வருகிறார்.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி பேகம் குல்சாம் (68) கடந்த 2014-ம் ஆண்டு முதல் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே பேகம் உடல்நலன் மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள The Harley Street Clinic-ல் அனுமதிக்கப்பட்டிருந்த பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவல் அவரது மகன் ஹுசைன் நவாஸ் மற்றும் அவரது மைத்துனர் ஷெபாஸ் ஷெரிப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் லண்டனில் இருந்து பாகிஸ்தானிற்கு அவரது உடலை கொண்டு வருவதற்காக பயணம் மேற்கொண்டுள்ளனர்.


முன்னதாக நவாஸ்- பேகம் தம்பதியினருக்கு ஹசன், ஹுசைன், மரியம், அஸ்மா என்ற 4 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.