பஸ் கட்டணம் நான்கு வீதத்தால் அதிகரிப்பட்டது..பஸ் கட்டணத்தை நூற்றுக்கு நான்கு வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

எனினும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

நாளை நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பஸ் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தன.