எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கலாம் ..எதிர்காலத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என்பதால் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.


கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார்.


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இடம்பெறும் மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கலாம் சி என் என் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் பத்தாம் திகதி எரிபொருள் விலை சூத்திரம் வருகிறது .. தயாராகுங்கள் என அவர் குறிப்பிட்டார்.