Breaking

Sunday, September 30, 2018

பெண்களின் திருமண வாழ்வை சீர்குலைக்கும் இளம் ஆண்களின் போதைவஸ்து பாவனை

பல லட்சம் பெற்றோர் தமது ஆண்பிள்ளைகள் ஏதோ ஒரு வகை போதைப்பொருள் பாவனைக்கு அடிபணிந்ததை தெரிந்தும் கூட அவர்கள் திருமணம் முடித்தால்
சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் இன்னொரு பெண்ணுடன் ஹலாலாக திருமணம் முடித்து வாழவைத்து அந்தப்பெண்ணின் வாழ்வையே அநியாயமாக்கி விடுகின்றனர்
போதைப்பொருள் பாவனையானது குடும்ப தாம்பத்திய வாழ்வில் உள்ள நாட்டத்தையும் எடுத்து விடும் அதற்கான ஊட்டத்தை ஊக்கத்தை இல்லாதொழிக்கும்
 உங்கள் குடும்ப வாழ்க்கை எதிர்கால வம்சம் 
ஆரோக்கியம்
கட்டுமஸ்தான உடற்பலம் அனைத்துமே போதையேற்றப்பட்டுவிட்டால்
 படிப்படியாக தளர்ந்து தளர்ச்சி கண்டு சுகாதார உடல் உள கோளாறுகளை வடுக்களை ஏற்படுத்தும் என்பதை குறிப்பாக
18-25 வயதுகளில் உள்ள இளைஞர்கள் புரியட்டுமாக

 இலங்கையில் பெருக்கெடுத்துள்ள இளவயது திருமணங்கள் வெகுவிரைவில் விவாகரத்தில் முடிய 
இத்தகைய 
தன்னியல்பற்ற உணர்வுகெட்ட 
உணர்வற்ற உயிரோட்டமற்ற

 ஆளுமையற்ற
புருஷலட்சணமற்ற
போதைப்பொருள் அடிமை மாப்பிளைகள் தான் காரணம்
உரிய தரப்புகள் சிந்திக்கட்டும்

இதுவும் யூத ஸியோனிஸ அமெரிக்க சதியென முழுப்பூனியையும் சோற்றில் மறைப்பது பொதுப்புத்தி பேதலித்து புதுப்புத்தி போதையேறி அறிவு அறவேயற்ற இழிநிலை என்பதையும் உணரட்டுமாக

M.M.A.BISTHAMY 
30/09/2018