அடுத்த மாதத்திலிருந்து புதிய, தரத்திலான கடித உறைகள் அறிமுகம்


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய தரத்திலான கடித உறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தபால் பரிமாற்றங்களின் போது, பல்வேறு வகையிலான கடித உறைகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரத்திற்கு ஏற்ப புதிய தபால் உறைகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பில் கடித உறைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.