கிணற்றிக்கும் வருகிறது மீட்டர் ; வர்த்தமானி அறிவித்தல்..தனியார் கிணற்றிற்கும் மீட்டர் பொருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குற்றம் சுமத்தினார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் தங்கள் வீட்டு தனியார் வீட்டு கிணற்றிக்கும் மீட்டர் பொருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் குறித்த வர்த்தமானியை வெளிப்படுத்தினார்.
மேலும் தற்போது வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் தங்கள் சொந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டார்.