திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் நிலநடுக்கம்


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் இன்று 15.09.2018ம் திகதி அதிகாலை 12.35 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.