இலங்கையில் இன்ஸ்டாகிராமினால், ஏற்பட்ட மரணம்


பிலியந்தலையில் காதலனால் தீ வைக்கப்பட்ட காதலி 12 நாட்களுக்கு பின்னர் இன்று களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


மாம்பே பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 20 வயதான காதலனால் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்த 19 வயதான காதலி இன்று களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பிலியந்தலை - மமபாத்த சேருவாவில பகுதியில் வசித்து வந்த சந்தினி கௌரிகா ஜயசேகர என்ற 19 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இவர்கள், பின்னர் காதலித்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


காதலியை தீ வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சசிது மதுசங்க பெர்னாண்டோ என்ற இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.