அக்குரணை வெள்ளத்தில் மூழ்கியது


நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.


சீரற்ற காலநிலையால் பெய்துவரும் கடும் மழை காரணமாக தற்போது கண்டி, அக்குரணை நகரமும் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


அத்தோடு நவலப்பிட்டி நகரமும் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.