நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு காரணம்


நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என நடிகை கௌதமி தொிவித்துள்ளார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகை கௌதமி அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி வருகிறார்.

விருதுநகரில் உள்ள வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல. வெண்மைக்காக பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவு களை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அதற்கு நானே நேரடி சாட்சி. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

இவற்றை ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது. நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி, கடல் உப்பு போன்றவற்றை அரச வழங்க வேண்டும் என்றார்.