அரைப் போத்தல் சாராயத்தை கொண்டு சென்றவருக்கு ஏழாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டம் விதித்த நீதிமன்றம்.


திருகோணமலை கிண்ணியாவில் அரைப் போத்தல் கசிப்பை கொண்டு சென்ற ஒருவருக்கு ஏழாயிரத்து
ஐந்நூறு ரூபா தண்டம் விதித்தார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் 
எம்.எச். எம். ஹம்ஸா.

ரமானிய்யா வீதி, கிண்ணியாவைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆலங்கேணி பகுதியிலிருந்து கிண்ணியாவுக்கு அரைப் போத்தல் கசிப்பைக் கொண்டு சென்ற போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து புதன் கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப டுத்தியபோதே தண்டம் விதித்து உத்தரவிட்டார்.